இந்த சூழ்நிலையில்தான் ஆத்மபிதாவின் அவதாரம். அவரது அவாதாரத்தின் ஒரு குறிக்கோள் கேரளானாச்சாரங்களை நிர்மூலம் செய்து கேரளத்தை நலமுறச் செய்தலே. இதற்காக ஆதிசங்கரரே ஆத்மபிதாவை கேரளத்திற்க்கு அனுப்பிவைத்ததாக பிதா அவர்கள் வெளிப்படுத்தியதாகவும் அறியப்படுகிறது. அச்சமயத்திலுள்ள கேரளநாட்டின் தார்மீகமற்ற நிலையை எல்லாம் புரிந்து, அவற்றை விட்டு, தார்மீக வழியில் வரவேண்டியே கேரளானாச்சாரம் என்னும் இந்நூலை பிதா அவர்கள் முதன்முதலாக வெளியிட்டு பிரச்சாரம் செய்தது, கேரளத்தில் நிலவியிருந்த அனாச்சாரங்களை சுருக்கமாக ஆனால் அப்பட்டமாக நாடக வடிவில் மிகச்சிறப்பாக இந்நூல் வழி சித்தரிக்கப்படுவது ஆத்மபிதாவின் ஞானநிலைக்கொரு சான்றாகும், கேரளானாச்சாரம் என்றொரு நூலை வெளியிடாமலிருந்தால், அன்றைய கேரளத்தின் நிலையை புரிந்து கொள்ளவோ, அன்னார்தம் அவதார மகிமையின் உண்மை தெரிந்து கொள்ளவோ இயலாமல் போயிருக்கும். நூல் வெளியிட்டதோடு மட்டுமன்றி கேரளானாச்சாரங்களை நிர்மூலம் செய்து கேரளத்தை நலமாக்கவும் அன்னார் அயராது பாடுபட்டனர்.
|