Description |
தற்கொலை குறுங்கதைகளின் மொழியில் ஒரு வெறித்தனமான களியாட்டத்தை அராத்து நிகழ்த்தியிருக்கிறார். பின்நவீனத்துவத்தின் உச்சபட்சமான மொழி விளையாட்டு இது. எதி அழகியலின் கலகக் களரி ஆட்டம் இது. இதுவரையிலான தமிழ்ப் புனைக்கதை வரலாற்றில் இப்படி ஒரு கட்டுடைத்தல் (deconstruction) நடந்ததே இல்லை என்று சொல்லலாம். மொழியில் மட்டும் அல்லாமல் கதை சொல்லும் முறையிலும் இதைச் செய்திருக்கிறார். தமிழ்ப் புனைக்கதை உலகம் இதுவரை பெருங்கதையாடல்களையே சொல்லி வந்திருக்கிறது என்பதை நாம் அறிவோம். அராத்து தனது குட்டிக் குட்டி கதைகள் மூலம் இதையும் உடைத்து விட்டார். |