Description |
நற்றிணையில் இப்படி ஒரு காட்சி வருகிறது. தலைவன் தலைவியைச் சந்திக்க அவள் வீட்டுக்கு வருகிறான். தோட்டத்தில் புன்னை மரத்தின் அருகே அவளை அழைத்துச் செல்கிறான். அவளோ “இந்தப் புன்னை மரத்தை என் இளம் வயதிலிருந்து வளர்த்து வருகிறேன். இது என் தங்கை. இங்கே உம்மைச் சந்திப்பது வெட்கமாக இருக்கிறது” என்கிறாள். இப்படி ஒரு மரத்தைத் தன் சகோதரியாக நினைத்த சமூகம் இது. ஆனால் இன்று? மரங்களை இழந்தோம். மழையை இழந்தோம். நம் நேரத்தையெல்லாம் சினிமாவும், தொலைக்காட்சியும் இண்டர்நெட்டும் எடுத்துக் கொண்டது. புத்தகத்திலிருந்து… |