Description |
பத்திரிகையாளர், கதாசிரியர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட இயக்குனர், நடிகர் என்று பல்வேறு தகுதிகளில் கடந்த நாற்பதாண்டுகளுக்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் பயணித்து வருகின்ற சித்ரா லட்சுமணன் எழுதியுள்ள மூன்றாவது நூல் இது. பல்வேறு காலகட்டங்களில் தமிழ் சினிமா உலகில் நடந்த பல சுவையான நிகழ்ச்சிகளை இந்தப் புத்தகத்திலே அவர் தொகுத்துத் தந்திருக்கிறார். அழகுத் தமிழில், மிக எளிய நடையில் அவர் எழுதியுள்ள இந்தக் கட்டுரைத் தொகுப்பு திரை ஆர்வலர்கள் படித்துப் பாதுகாக்க வேண்டிய ஒரு நூல் |