Description |
சோவியத் யூனியனால் ஆப்கனிஸ்தான் ஆக்கிரமிக்கப்பட்ட தருணத்தில், அழுத்தம் தாங்காமல் போர்க்கொடி உயர்த்திய ஆப்கன் இயக்கங்கள் பல. காலப்போக்கில் அவை வெவ்வேறு மூலைகளில் தெறித்து விழுந்து காணாமல் போய் விட்டன. உயிரோட்டத்துடனும் உத்வேகத்துடனும் இன்று வரை இயங்கிக்கொண்டிருக்கும் ஒரே இயக்கம், தாலிபன். |