Description |
ஒற்றைப் போராக கண்முன் சித்தரிக்கப்படுவதன் வேர்களில் உள்ள முடிச்சுகளை தொட்டு எழுதி வரும் வாசுமுருகவேலின் அரசியல் பார்வை எழுத்தில் பூடகமாவே வெளிப்படும். ஆனால் இந்நாவலில் வெளிப்படையாகவே வருகிறது. ஒரு இலக்கியகர்த்தாவாக அடிப்படைவாதங்களின் ஊற்றுமுகத்தையும் விளைவையும் இதில் மையப்பொருளாக்கி யிருக்கிறார். அடிப்படைவாதத்திற்கு மொழி இனம் மதம் என பாகுபாடு கிடை யாது. அனைத்து தளங்களில் இருந்தும் எழுந்து வந்தபடிதான் இருக்கிறது. மொழி அடிப்படைவாதம் தன் சுயலாபத்துக்காக எதிர் தரப்புக்குள் மத அடிப்படைவாதத்தை ஊக்குவிக்கிறது. அதன் விளைவு, தன்னை ஊக்குவித்தவர் மீதே பின்னால் பாய்கிறது. இந்த இரு காலங்களையும் முன்னுக்குப் பின்னாக சொல்லிச்செல்கிறது வாசுமுருகவேலின் நாவல். |