Description |
|
பழந்தமிழ் சொல்லிணைவுகள் மீதும், அது உருவாக்கும் ஆழமான பொருள் மீதும் தீரா மயக்கம் கொண்டவர் கவிஞர் இசை. இக்கட்டுரை நூலில் நமது நீண்ட கவி மரபின் கண்ணிகளைக் காட்சிக்கு வைக்கிறார். பழந்தமிழ்ப் பாடல்களைப் பம்பரமாயும், நவீன கவிதைகளைச் சாட்டையெனவும் பாவித்து இசை சுழற்றுகையில் உண்மையில் பெரும் ஆட்டம் கழ்ந்துவிடுகிறது. காமத்தையும் காதலையும் அழகையும் ஆன்மீக நிலையில் வைத்துப் பார்க்கும் இசையின் கண்களில் கொஞ்சம் திவ்யம் கூடியிருக்கிறது. |