Description |
|
இந்தியத் துணைக் கண்டத்தின் பண்டைய தத்துவ மரபுகள், அவற்றின் தோற்றம், வளர்ச்சி, இன்றைய நிலை ஆகியவற்றை அறிந்து தெளிவு கொள்ள ஒப்புவமை இல்லாத நூல். தரவுகளையும், மூல நூல்களையும் கசடறக் கற்று, அவற்றை காய்தல் உவத்தல் இன்றி கறாரான அறிவியல், வரலாற்று நோக்கில் பகுத்தாய்வு செய்து எழுதப்பட்ட நூல். சம கால இந்தியத் தத்துவ நோக்கு, உளவியல் போக்கு ஆகியவை குறித்து புரிந்து கொள்ளத் தேவையான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கும் நூல். இந்தியாவின் தொன்மையான தத்துவ மரபுகள், பள்ளிகள் குறித்து அந்த மரபுகளைச் சார்ந்ததாகக் கூறிக்கொள்ளும் எவரையும் விட தெளிவுற எடுத்துரைக்கின்றார். |