1 / 3
The Woods

குன்றா வளம்

Author நிர்மல்
Publisher எழுத்து பிரசுரம்
category கட்டுரை
Edition 1st
Format Paperback

₹133

₹140

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

வளர்ச்சி என்றால் என்ன? இயற்கையை அழிக்காமல் வளர்ச்சி என்பது சாத்தியப்படுமா? என்பதில் தொடங்கி, வளர்ச்சி பற்றிய பல்வேறு விசயங்களை இயல்பான மொழி நடையில், அறிவியல் தரவுகளோடு, பல்வேறு நூல்களின் துணையோடு உள்ளத்தைக் கிள்ளியபடியே பேசுகிறது இந்நூல். "ஆதி மனிதன் கல்லை எடுத்து வேட்டை ஆடினான். அடுத்த மனிதன் காட்டை அழித்து நாட்டைக் கட்டினான்" என்று ஹெட்போன் மூலமாகப் பாட்டு கேட்டுக்கொண்டே ஆறுவழிச் சாலையில் பயணிக்கிறவர்கள், அந்தச் சாலைகளுக்காக அழிக்கப்பட்ட மரங்கள், கொல்லப்பட்ட அபூர்வ உயிரினங்கள், பல்லுயிர்ப்பெருக்கத்தின் மரணம் பற்றி சிந்திக்க வாய்ப்பில்லை. இப்படிச் சிந்திப்பதால் அதி விரைவுச் சாலைகளை அமைக்கக்கூடாது என்று சொல்லவும் முடியாது. பொருளாதார வளர்ச்சிக்காக மனிதர்கள் உருவாக்கிய உற்பத்தி முறைகளால் இந்தப் பூமிக்கும், இயற்கைக்கும் எவ்வாறெல்லாம் கேடுகள் ஏற்பட்டுள்ளன? அந்தக் கேடுகளை சரிசெய்ய மனித இனம் எவ்வாறெல்லாம் தன்னுடைய உற்பத்தி முறையை சீர்படுத்திக்கொண்டே வந்துள்ளது என்பதில் தொடங்கி, Sustainability எனப்படும் நிலையான, நீடித்த வளர்ச்சியைப் பெறுவதற்கு உலக நாடுகள் முன்னெடுக்க வேண்டிய செயல்பாடுகள் பற்றி தெளிவாக எடுத்துரைக்கிறது இந்த நூல். Sustainability, சூழலியல் அக்கறை போன்றவற்றை பொருளாதார வளர்ச்சிக்கு எதிரான செயலாகவே பார்க்கப்பட்டு வருவதற்கு மாற்றாக குன்றா வளர்ச்சி என பேசப்படும் sustainability என்பது தொழிற் வளர்ச்சியின் அடுத்த படிநிலை என மிக இயல்பாகவும் சுருக்கமாகவும் சொல்கிறது

Related Books


5% off ஆயன்book Add to Cart

ஆயன்

₹569.05₹599