Description |
ப. சிவனடி எழுதி பதினான்கு தொகுதிகளாக 1987 முதல் 1999 வரை வெளியாகி உள்ள இந்திய சரித்திரக் களஞ்சியம் மிக முக்கியமான தமிழ் நூலாகும். பதினெட்டாம் நூற்றாண்டின் துவக்கம் முதல் ஒவ்வொரு பத்தாண்டுகாலத்தையும் தனியே எடுத்துக் கொண்டு அந்த காலகட்டத்தில் உலகம் எங்கும் பல்துறைகளில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள், மாற்றங்கள், கண்டுபிடிப்புகள் இவற்றோடு இந்திய சரித்திரத்தை இணைந்து உருவாக்கபட்டுள்ள இந்த நூல் சமகால வரலாற்று புத்தகங்களில் முக்கியமானதும் தனித்துவமானதுமாகும். இது போன்ற வரலாற்று பகுப்பு கொண்ட தமிழ் நூல் வேறில்லை. - எஸ். ராமகிருஷ்ணன் |