Description |
மனிதன் ஒரு நோய். மனிதனுக்கு நோய் வருகிறது. ஆனால் மனிதனே ஒரு நோய். இதுதான் அவனுடைய பிரச்சினை. அதே சமயம் அதுதான் அவனுடைய தனித்தன்மை. அதுதான் அவனுடைய நற்பேறு. அவப்பேறு. கவலை, பதற்றம், நோய், உடல்நலக்குறைவு ஆகியவை மனிதனுக்கு மட்டுமே உள்ள பிரச்னைகள். பூமியில் வேறு எந்த மிருகத்திற்கும் இந்தப் பிரச்னைகள் இல்லை. இந்த நிலைதான் மனிதனுக்கு முன்னேற்றத்தை, பரிணாம வளர்ச்சியைக் கொடுக்கிறது. நோய் வந்தால் மனிதன் அதனுடன் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. அந்த நிலையை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. இந்த நோய்தான் மனிதனின் ஆற்றல், அமைதியின்மை. அதே சமயம் இதுதான் அவனுடைய அவப்பேறும் கூட. அமைதியில்லாமல், மகிழ்ச்சியில்லாமல் இருப்பதனால் அவன் கஸ்டப்படுகிறான். |