1 / 3
The Woods

ஈழம்: எதிர்ப்பு அரசியலின் எதிர்காலம்

Author யமுனா ராஜேந்திரன்
Publisher அடையாளம் பதிப்பகம்
category கட்டுரை
Pages 692
ISBN 9788177201772
Edition 1st
Format paperback

₹522.5

₹550

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

ஆயுதப் போராட்டம் விடுதலை அரசியலின் உச்சகட்ட புரட்சிகர வடிவம் எனக் கருதப்படுகிறது. மானுட மீட்சிக்காகத் தன்னை இழத்தல் எனும் உன்னதம் இங்கு நடைமுறையாகிறது. ஈழ விடுதலைப் போராட்டம் என்பது உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் அனுபவங்களுடனும் நினைவுகளுடனும் கலந்துவிட்டிருக்கிறது. தமிழ் அரசியல், கலாச்சாரம், இலக்கியம், தத்துவம், இதுவரைத்திய தமிழ் இடதுசாரி மரபு அனைத்தையும் ஈழ விடுதலைப் போராட்டம் தலைகீழாகப் புரட்டிப்போட்டிருக்கிறது. ஈழப் போராட்டம் நந்திக்கடலில் வஞ்சகமாக அழிக்கப்பட்டிருந்தாலும், அதனது வரலாற்றுப் பிழைகளையும் தாண்டி, மானுட சுயதரிசனங்களையும் அரசியல் சுயவிமர்சனங்களையும் அது எழுப்பியபடியே இருக்கிறது. உலக தேசிய விடுதலைப் போராட்ட மரபின் பின்னணியில் ஈழ விடுதலைப் போராட்டத்தை மீளாய்வு செய்யும் இக்கட்டுரைகள், இன்றைய சர்வதேசிய அரசியல் சூழலில் எதிர்ப்பு அரசியலின் எதிர்கால வடிவம் எத்தகையதாக இருக்க முடியும் எனும் தேடலையும் மேற்கொள்கிறது. தமிழகம் புகலிடம் எனும் முப்பெரும் பிரதேசங்கள் சார்ந்த எதிர்ப்பு அரசியலின் எதிர்காலத்திற்கு மட்டுமல்ல, பொதுவான எதிர்ப்பு அரசியலின் எதிர்காலத்துக்குமான விமர்சன அரசியலை அவாவியே இக்கட்டுரைத் தொகுப்பு உங்களின் முன் வருகிறது.

Related Books


5% off ஆயன்book Add to Cart

ஆயன்

₹569.05₹599