Description |
எளிமையே ஆகப்பெரும் சிரமத்தை தரும். ஆனால் அந்த சிரமம் உமா மோகனுக்கு இல்லை என்பதை இவரின் சில சிறந்த கவிதைகள் உணர்த்துகின்றன. அக உணர்ச்சிகளை எளிய ஆழமான கவிதைகளாக மாற்றுவதிலும் அவரின் ஆளுமை வெளிப்படுகிறது. சங்கக் கவிதை போல ஒரு ஒற்றைக் காட்சியைக் காட்டிவிட்டு சத்தமில்லாமல் சென்றுவிடுகிறார். பிறகு அதன்மூலம் நீங்கள்தான் உங்கள் கவிதையை எழுதிக்கொள்ள வேண்டும். இதன்மூலம் வாசகனை சஹிர்தய நிலைக்கு உயர்த்துகிறார். |