Description |
இந்தியாவிலேயே முதன் முதலில் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தைத் தொடங்கி வைத்தவர் சி.பி. பெருந்தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோத சி.பி.யை பின்பற்றி தமிழ்நாட்டில் மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தும்போது அவர் சி.பி.யை நினைவு கூறத் தவறவில்லை. பின்னர் எம்.ஜி.ஆர். ஆட்சிக்கு வந்தபோது சத்துணவுத் திட்டம் என்ற பெயரில் இதை மேலும் விரிவுபடுத்தினார். சி.பி. யின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொண்டு தலைமையுரை ஆற்றிய எம்.ஜி.ஆர். மதிய உணவுத் திட்டத்தின் முன்னோடி சர்.சி.பி. என்று புகழாரம் சூட்டினார். - ச. இராசமாணிக்கம் |