1 / 3
The Woods

ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்

Author நீட்ஷே , Translator : இரவி
Publisher காலச்சுவடு பதிப்பகம்
category நாவல்
Pages 423
ISBN 9788189359447
Edition 1st
Format paperback

₹470.25

₹495

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

நம் பொதுமனப் பாங்குகளைத் தர்த்தெறிந்து, நம்முடையதேயான மெய்ம்மையை நோக்கி நம்மைத் திரும்பச் செய்து, புதிய அழகுகளுக்கும் புதிய அர்த்தங்களுக்கும் நம்மைச் செலுத்திவிடுகிற நூல் இது. 1885ல் ஜெர்மனிய மொழியில் வெளியான Thus Spoke Zarathustra வை தத்துவார்த்த நாவல் என்றே குறிப்பிடுகிறார்கள். நான்கு பகுதிகளாக எழுதப்பட்ட இந்நூல் அதிமனிதனான ஜராதுஷ்ட்ராவின் வருகை மற்றும் அவனது எண்ணங்களை பற்றி விரிவாக கூறுகிறது. பைபிள் எப்படி எழுதப்பட்டிருக்கிறதோ அது போன்ற கவித்துவ மொழிநடையில் அதன் நேர் எதிராக சிந்தனைகளை நீட்ஷே எழுதியிருக்கிறார். நீதிமொழிகள் போன்று பாடல்களாகவும் அதற்கான விளக்கமாகவும் எழதப்பட்ட இந்த நூல் ஜராதுஷ்ட்ராவின் சொல்லாடல்களாக விரிகின்றன. நல்லது மற்றும் தீயதிற்கு அப்பால் நிற்கும் நற்குணம் கொண்ட அதிமனிதனாக ஜராதுஷட்ரா சித்தரிக்கபடுகிறான். பலநேரங்களில் ஜராதுஷ்ட்ரா புத்தரை போலவே இருக்கிறான். புத்த அறகருத்துக்கள் போன்ற தொனியே அவனிடமும் ஒலிக்கிறது. ஜராதுஷ்ட்ராவை வாசிப்பது ஏகாந்தமான அனுபவம். அது நம்மை அலைகள் உள்ளே இழுப்பது போல தானே இழுத்து செல்கின்றன. அலை வெளியே தள்ளுவது போல தானே வெளியே தள்ளவும் செய்கின்றன. ஜராதுஷ்ட்ராவை வாசிப்பது ஒருவன் தன்னை தானே உற்று நோக்கி கொள்வது போன்றதே. உடலை அவதானிப்பது போல நாம் சிந்தனைகளை உற்று நோக்கி ஆராய்வதோ, அவதானிப்பதோ இல்லை. இந்ததளத்தில் தான் ஜரதுஷட்ரா செயல்படுகிறான். - எஸ். ராமகிருஷ்ணன் எங்கு தனிமை முடிவடைகிறதோ,அங்கே சந்தை ஆரம்பிக்கிறது; எங்கே சந்தை ஆரம்பிக்கிறதோ,அங்கே மகத்தான நடிகர்களின் பேரோசையும்,விஷப்பூச்சிகளின் ரீங்காரமும் ஆரம்பிக்கிறது. - நீட்ஷே ( ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான்) நாம் நம்மைக் குறித்து மகிழக் கற்றுக்கொண்ட பிறகே , மற்றவர்களைப் பாதிக்கவும், மற்றவர்களுக்கு எதிராகச் சதி செய்யவும் கற்றுக்கொள்வதை மறக்கிறோம். - ஜரதுஷ்ட்ரா இவ்வாறு கூறினான் - நிட்ஷே.

Related Books


5% off அஞர்book Add to Cart

அஞர்

₹150
5% off மாகே கஃபேbook Add to Cart

மாகே கஃபே

₹261.25₹275
5% off கொடிவழிbook Add to Cart

கொடிவழி

₹379.05₹399
5% off THE POISONED DREAMbook Add to Cart

THE POISONED DREAM

₹379.05₹399