Description |
வீரம் செறிந்த சங்கிலியன், அடிமைத்தனத்திற்கு ஆட்படாத பண்டார வன்னியன் என எத்தனையோ வீரத்மிழர்களை அள்ளிக் கொடுத்தது தமிழீழம். இவர்களின் வழித்தோன்றலாக பேரினவாத ஒடுக்குமுறைக்கு எதிராக போர்க்கொடி தூக்கி, விடுதலைப் புலிகள் எனும் மாபெரும் புரட்சிப் படையை உருவாக்கி பாசிச சிங்களத்திற்கு எதிராக போர்தொடுத்து எத்தனையோ தியாகங்கள், வீரச்சமர்கள், ஊடறுப்பு வியூகங்களை நடத்திக் காட்டி வெற்றி கண்ட மாபெரும் வீரன் மேதகு வே.பிரபாகரன்! அத்தகைய மாவீரனைப் பற்றியதே இப்படைப்பு! இப்படைப்பில் உள்ள குறில் எழுத்துக்கள் கூர்வாளாக பகைமையை அறுக்கும். நெடில் எழுத்துக்கள் தமிழினத்தின் கவசமாய் திகழும். இவ்விரண்டையும் தன் ஆன்மாவென தரித்து வாழ்ந்த ஓர் மாவீரனைப் பற்றியே இப்படைப்பு புகழும்! என்னே ஒரு வீரம்! என்னே ஒரு போர்த் திறன்! என்று வாசிக்கும் போதே பல இடங்களில் நமை அறியாது சிலிர்த்து விடுகிறது. இன்றைக்கும், தலைமுறை தலைமுறையாக நாளை வருவோர்க்கும் வீரத்தையும் விவேகத்தையும் ஊட்டும் சேனையே இப்படைப்பு! புறநானூற்றை படிக்காதவர்கள் கூட, இந்த வீரஞ்ச்செரிந்த "புறநானூற்று வீரன்" வரலாற்றைப் படித்துவிட்டால் போதும்! |