Description |
மனிதனுக்கு வரும் நோய்களைக் குணமாக்கும் மருந்து நம் விரல்களிலேயே இருக்கிறது என்றால் விந்தையாக இருக்கிறதல்லவா? ஆம், விரல்களைக் கொண்டு செய்யும் முத்திரைகளால் நோய் விலகிவிடும் என்பதை கடவுளர்களின் விக்கிரகங்களைப் பார்த்தாலே புரியும். இயற்கையிலேயே சில முத்திரைகள் நம் வாழ்வோடு இணைந்திருக்கிறது. தாயின் வயிற்றில் இருக்கும் சிசு தன் இரண்டு கைகளையும் அழுத்தமாக மூடிப் பிடித்திருக்கும் முத்திரை, ஆதி முத்திரை. வெளிப்புற ஈர்ப்புகள் மற்றும் கவனச் சிதறல்களிலிருந்து விடுபட இந்த முத்திரை உதவுகிறது. இதுபோன்று ஒவ்வொரு முத்திரைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. உடல், மனம் சார்ந்த அனைத்து நோய்களையும் நமது விரல்களால் செய்யும் முத்திரைகளால் சரிசெய்யலாம். முத்திரைகள் நமது விரல்கள் வழியே, ஐம்பெரும் சக்திகள் மற்றும் உயிர் ஆதாரங்களையும் தூண்டி நோய் நிலைகளைச் சரிசெய்கிறது. முத்திரை என்பது ஓர் உயர் யோகக்கலை, யோகாசனப் பயிற்சிகளின் உச்சம். முத்திரைக்கான பயிற்சியை முறையாகச் செய்து அதன்படி முத்திரைகளைச் செய்து வந்தால் நோய்களில் இருந்து விடுபடலாம் என்பதை விளக்கும் நூல் இது! டாக்டர் விகடன் மற்றும் சக்தி விகடனில் வெளிவந்தவை இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. விரல் செய்யும் விந்தைகளைப் பாருங்கள், பலன் பெறுங்கள்! |