Description |
"உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஆயுதப் படையணியின் ஒரு குழுவினர், எல்லோரும் பார்த்திருக்க 42 அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை பிடித்து போலீஸ் டிரக்கில் ஏற்றி ஓடும் கால்வாய்க்கருகில் கொண்டு செல்கிறார்கள். பின் அவர்களை ஒவ்வொருவராக சுட்டுக் கொன்று அந்த கால்வாய் நீரில் வீசி எறிகிறார்கள். பின் அவர்கள் வாகனத்தின் மீது தாவி ஏறி, தங்கள் முகாமை அடைந்து தொந்தரவுகளேதுமற்ற உறக்கத்தில் ஆழ்கிறார்கள்." அந்த இளைஞர்கள் செய்த குற்றமென்ன? ஏன் காவல்துறையினர் அவர்களை கொன்று கால்வாயில் வீசினர்? இப்படியெல்லாம் நடந்திருக்குமா? போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கிறார் முன்னாள் காவல்துறை ஐ.ஜி. விபூதி நாராயண்ராய். |