Description |
பாசிஸ்ட் ஆக்கிரமிப்பாளர்களை எதிர்த்து சோவியத் மக்கள் நடத்திய மாபெரும் தேச பக்தப் போர் இந்தக் கதைக்குப் பின்னணியாகும். ஒரு தாய் இந்தப் போரில் தன்னுடைய மூன்று குழந்தைகளையும் இழந்துவிட்டாள். ஆனால் நன்மையின் மீதும் மனித குலத்தின் மீதும் கொண்டிருந்த நம்பிக்கையை அவள் இழக்கவில்லை, அந்த எளிமையான தாயின் சோகக் கதையை ஆசிரியர் உருக்கத்துடன் விவரிக்கிறார். கிர்கீஸியாவின் எழுத்தாளரும் சோவியத் யூனியனுடைய அரசுப் பரிசும் லெனின் பரிசும் பெற்றவருமான சிங்கிஸ் ஐத்மாத்தவ் ‘முதல் ஆசிரியர்’, ‘குல்சாரி’, ‘ஜமீலா’, ‘சிகப்புத்துண்டு அணிந்த என் சிறிய வின்ஸ்டன் மரம்’, ‘வெள்ளைக் கப்பல்’ முதலான மிகச் சிறந்த நாவல்களை எழுதியவர். |