Description |
இக்கட்டுரைகள். முழுக்க முழுக்க ரசனை சார்ந்தவை. அனுபவம் சார்ந்தவை. ரசிக்கும் மனத்தின் பறத்தலுக்கும், வரையறைகளுக்கும் உட்பட்டவை. கவிதையை வாசிக்கும்போதோ, வாசித்த கவிதைகளைப் பற்றி யோசிக்கும்போதோ, நினைவுக்கு வந்த அனைத்தையும் ஏதோ ஒரு விதத்தில் கோத்துத் தருபவை. அனைத்துக் கட்டுரைகளுமே கவிதை பற்றிப் பேசுபவை; கவிதையியல் பற்றியவை அல்ல. எனக்கு நானே பேசிக்கொண்டதைக் கோத்து வைத்திருக்கிறேன். மற்றபடி, கவிதையுடனான சகவாசம், எந்த அளவிலுமே கிளர்ச்சி தரக்கூடியது. காலச்சுவடு இதழில் தொடர் பத்தியாக வெளியான கட்டுரைகளுடன் புதிதாக எழுதப்பட்டவையும் சேர்ந்தது இந்தத் தொகுப்பு. |