Description |
வண்ணநிலவனின் வாழ்க்கை அனுபவங்களின் பதிவு இது. பள்ளி, கல்லூரி காலத்திலிருந்து தொடங்கி, அச்சகம், இதழியல் சினிமா ஆகிய துறைகளில் பணிபுரிந்த அனுபவங்களையும் எழுத்து, இசை, நாடகம், ஓவியம் சார்ந்த அனுபவங்களையும் பதிவு செய்திருக்கிறார். கிட்டத்தட்ட 50 ஆண்டுக் காலம் திருநெல்வேலி, சென்னை, மதுரை முதலான நகரங்களில் வாழ்ந்த அனுபவங்களையும் தான் சந்தித்த ஆளுமைகளுடனான அனுபவங்களையும் வண்ணநிலவன் பகிர்ந்துகொள்கிறார். இந்த நூல் வண்ணநிலவனின் சுயசரிதையாகவும் அவர் வாழ்ந்த காலத்தின் ஆவணமாகவும் இலக்கிய வரலாறாகவும் ஒருசேர அமைந்துள்ளது. வண்ணநிலவனின் வாழ்க்கைப் போராட்டத்தின் வெற்றியையும் வேதனையையும் ஏமாற்றத்தையும் அவமானங்களையும் வாசகர் உணரச் செய்யும் பகிர்வு இது. |