Description |
தத்துவ விசாரம் கொண்டவை, ஆன்மீகமானவை என்று ஆனந்தின் கவிதைகளைக் காண விரும்புகிறேன். ஆனால் தத்துவம், ஆன்மீகம் ஆகியவற்றுக்கு அளிக்கப்பட்டிருக்கும் மரபான பொருளில் அல்ல. அதற்கு மாறான நவீன வாழ்க்கை சார்ந்த பொருளில். தத்துவம் என்பது அனுபவத்தை விளக்குவதாகவும் ஆன்மீகம் என்பது இறைமையை அடைவதாகவும் காலங்காலமாகப் பயின்று வருகின்றன. நவீனகாலம் தத்துவத்தை மானுட இருப்பின் தேடலாகவும் ஆன்மீகத்தை இம்மையியல் சார்ந்ததாகவும் புதிய பொருளில் காண்கிறது. இந்த இயல்பின் சான்று ஆனந்தின் கவிதைகள். |