Description |
2021ஆம் ஆண்டின் இலக்கியத்திற்கான நோபல் பரிசு பெற்ற அப்துல்ரஸாக் குர்னாவின் மிகச் சிறந்த நாவலான By The Sea யின் தமிழாக்கம் ஒரு கடல் இருநிலம். ஆப்பிரிக்க நாடொன்றிலிருந்து பிரிட்டனுக்கு அகதியாக வந்து சேரும் சலேக் ஓமர், தனது நாட்டைச் சேர்ந்த லத்தீப் மஹ்மூதை அங்கு சந்திக்க நேர்கிறது. சொந்த நாட்டில் பல வருடங்களுக்கு முன்பு இருவரின் வாழ்க்கையிலும் ஊடாடிய சில கொந்தளிப்பான சம்பவங்களை உணர்வுப்பூர்வமாக தங்களுக்குள் பகிர்ந்துகொள்கிறார்கள். இந்த நினைவுகளின் பின்னலை மெல்லிய நகைச்சுவை இழையோடுகின்ற தனது செறிவான மொழியால் இந்நாவலில் குர்னா நமக்கு உணரத்தருகிறார். மனித உணர்ச்சிகளின் எல்லா வண்ணங்களையும், மனித உறவுகளின் உருமாற்றங்களையும் நம்முன் விரிக்கிறது இந்தப் படைப்பு. |