Description |
"இந்திய மாற்றுக் கருத்தியலின் பன்முக உருவமாக, விடுதலைக்கான தத்துவ-அரசியல் வடிவமாக நிற்கும் பாபாசாகேப் அம்பேத்கர் உருவாக்கிய மரபைத் தொடர்வதற்கு ஒவ்வொரு மொழியிலும் கருத்தியல் தலைமைகள் தேவை. இன்று தமிழகத்தில் தோழர் தொல்.திருமாவளவன் அதனை அளித்து வருகிறார். அவருடைய குரல் பிற இந்திய தலித் விடுதலைத் தலைமைகளில் இருந்து பலவகைகளில் வேறுபட்டது. உலக அரசியலையும், பன்மெய் அரசியலையும் தன் களமாகக் கொண்டது. இந்தியப் பொது விடுதலை அரசியல் முழுமைக்குமான வழிகாட்டும் பேராளுமை அவர். இனியான அரசியலின் திசைகளை மாற்றி அமைக்கும் சொல்லும் செயலும் அவருடையவை.” |