Description |
நம்மைப் பொருத்தவரை, ஒரு குறிப்பிட்ட கொள்கை மக்களை ஆட்சிபுரிய வேண்டுமேயொழிய, ஒரு குறிப்பிட்ட நாட்டார்களே, வகுப்பார்களே, மதக்காரர்களோ ஆட்சி புரியவேண்டும் என்பதல்ல. பல மதம் - பல ஜாதி - பல சமூக அபிமானம் கொண்ட மக்கள் வாழும் நாட்டில், பல மதம் - பல ஜாதி - பல சமூக அபிமானம் ஆகியவை ஒழிகின்றவரை இவற்றில் சம்பந்தப்படாத அல்லது ஜாதி, மத, சமூக வித்தியாசமோ அபிமானமோ இல்லாத, அவற்றில் கவலையற்ற மக்கள்தான் ஆட்சி புரிய வேண்டும் என்போம். அதனாலே தான் பிரிட்டிஷ் கவர்ன்மென்ட் ஒழிந்தால், குஷிய அரசாங்கக் கொள்கையே இந்தியாவை ஆட்சிபுரிய வேண்டும். என்கின்றோம். அந்தக் காலத்தில் இந்து முஸ்லிம் - கிறிஸ்தவ தகராருக்கு இடமே இருக்காது; தீண்டாமைக் கொடுமைக்கும் இடமிருக்காது. ராமராஜ்ஜியத்தைப் பற்றிய பேச்சே இருக்காது. -பெரியார்இந்து ராஜ்ஜியம் நடைமுறைக்கு வந்தால், அது இந்த நாட்டிற்குப் பேரழிவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்துக்கள்என்னதான் விளக்கங்கள் கொடுத்தாலும் இந்து மதம் என்பது கதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாகவே இருக்கிறது. அந்த வகையில் அது ஜனநாயகத்திற்கு எதிரானது. எனவே, எப்பாடு பட்டாகிலும் இந்து ராஜ்யம் தடுக்கப்பட்டாக வேண்டும்.- அம்பேத்கர் |