Description |
கிட்டத்தட்ட பதினைந்து வருஷ காலமாக இந்தப் பத்திரிகைகளுடன் எனக்கு நட்பு உண்டு. தமிழ் நாட்டிலுள்ள பத்திரிகைகள் எல்லாம் இலக்கிய உத்தாரணம் செய்கின்றனவா இல்லையா என்பது வேறு விஷயம். அவர்கள் இலக்கியம் வளர்த்தாக வேண்டும் என்று வாதிட எனக்கு அதிகாரம் இல்லை, என் கதைகளை அவர்கள் கேட்டு வாங்கிப் பிரசுரிக்கிறார்கள். அவர்கள் பிரசுரிப்ப தால் நான் அவர்களுக்குக்கதைதருகிறேன். நான் அவர்களின் ஊழியனோ பங்குதாரனோ அல்ல. அவர்கள் வியாபாரத்துக்காகப் பத்திரிகை நடத்து கிறார்கள். சில சமயங்களில் மிக மோசமான வியாபார உத்திகளைக்கூடக் கையாளுகிறார்கள். |