Description |
மனிதனின் பிறப்புக்கும் இறப்புக்கும் இடையில் வாழ்வில், நித்தமும், நிகழும் நிகழ்வுகளை உள்ளடக்கியது தான் இராசி சக்கரம் என்னும் ஜாதக கட்டமாகும். உடலைவிட்டு உயிர் பிரிந்த நேரம், நாள், நட்சத்திரம், திதி, ஊரை வைத்து, உயிர் பிரிந்த முன்னும், பிரிந்த பின்னும் ஆன்மாவின் நிலையை அறிந்திட உதவுவது தான் "இறப்பின் இரகசிய புண்ணிய சக்கரமாகும்". இது ஸ்ரீஸ்கந்த உபாசகர் "ஜீவநாடி கலையரசு" திரு.P.D.ஜெகதீஸ்வரன் அவர்களின் முத்தான மற்றுமொரு வித்தான அரிய படைப்பு. திம்ப சக்கரத்தில் கல்வி நிலை கண்டறியும் நிலை, திம்ப சக்கரத்தில் நோய் கண்டறியும் முறைகள், திம்ப சக்கரம் மூலம் கோட்சார பலன்களை எளிய முறையில் கண்டறியும் வழிகள், திம்ப சக்கரம் மூலம் உபாசனை சித்தியாகும் வழிகள், திம்ப சக்கர உதாரண ஜாதகர்கள் மூலம் திம்ப சக்கர திசை, புத்தி பலன்களை எளிதில் கண்டறியும் வழிகள் எல்லாம் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. கோட்சார நிலைகளை வைத்து சூட்சும திம்ப சக்கரம் இராசி திம்ப சக்கரம் கணிக்கும் முறைகள் எளிய நடையில் உரிய முறையில் விளக்கப்பட்டுள்ளது. இதுவரை வெளிவராத திம்ப சக்கர சூட்சும இரகசிய பரிகார குறிப்புகள் அத்தனையும் முத்துக்களாக முக்கிய பங்கு வகிக்கிறது. வாழ்க்கையில் ஏற்படும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் மிக துல்லிய பலனைக் காண படைக்கப்பட்ட அரிய பொக்கிஷம் தான் திம்ப சக்கரம். பரிகாரங்கள் மூலம் பலன்களைக் காண பல வழிமுறைகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளது. திம்ப சக்கரம் நூலை ஜோதிடர்கள் படிக்கும் பாக்யம் பெற்றால் தங்கள் திறமைக்கு மணிமகுடமாய், சிகரத்தின் ஜீவ ஒளியாய் திகழ முடியும் என்பதற்கு உத்தரவாதம் அளித்திடும் உன்னத நூல். இறைவன் வகுத்த நியதியை அறிந்து இரகசியமான விதியை மிகத் துல்லியமாய் உணர்த்துவது இந்நூல். ஜோதிடர்கள் இந்நூலைப் படித்து பலன் பெறுவதற்கு பாதை வகுத்திடுவது திம்ப சக்கரம். |