Description |
இந்நூலானது உலகத்திலுள்ள ஜாதிகள் எல்லாம் ஒன்றே என்பதை அறிவித்து , கண்களுக்கு புலப்படாத சிறிய புழு முதல் பிரம்மதேவன் வரையில் ஸர்வம் பிரம்ம சொரூபமே என்று தெரிவித்து, அப்பிரம்ம சொரூபத்தில் நாமெல்லோரும் ஏதோ ஓர் ஜென்மத்தில் போய் சேர்ந்துவிடுவது திண்ணம் என்னும் ரகஸ்யார்த்தங்களையெல்லாம் மிகவும் தெளிவாக கூறுகின்றது. மாயை என்னும் சமுத்திரத்தைக் கடந்து கடைத்தேறப்பட்டவர்களுக்கு இந்நூல் ஒன்றே போதுமானதாய் இருக்கிறது. பல சாஸ்திரங்களிலும் அடங்கியுள்ள ரஹஸ்யங்கள் இதில் அடங்கி இருப்பதால் மோஷமெனும் வீட்டை அடைவதற்கு இந்நூல் ஒன்றே போதுமானதாய் இருக்கின்றது. பல பெரியோர் அனேக ரஹஸ்யங்களை எல்லாம் பாடல்களாயும் கவிதைகளாயும் வெளியிட்டதுபோல் இல்லாமல் , எல்லாம் வசன நடையில் கூறியிருக்கின்றார்கள். இந்நூலில் மனதை அடக்குவது சுலபமென்று சொல்லி ,அம்மனதை அடக்கும் ரஹஸ்யங்களை எல்லாம் கூறியிருக்கின்றார்கள். |