Description |
எண்ணங்களும் சொற்களும் ஒத்திசைவுடன் வந்து விழுந்த வரிகள் மட்டும் கவிதையாவதில்லை. மேலிருந்து வழியும் நீருக்கு தனி வழி தேரும் அவசியமேதுமில்லை. வரிகளின் முடிவில் புள்ளியிட்டுவிட்ட பிறகு அந்த காகிதத்திற்கும் கவிஞனுக்குமுள்ள உறவு, உன்னிப் பறந்திட்ட பறவையும், அதன் கிளையும் போலவே. சொல்வெளியில் கலந்துவிட்ட அதற்கு மீண்டும் நாண் பூட்டப்பட வாய்ப்பில்லை. தன்னை மீள மீள வாசிப்பவருக்கு பொருட்காட்சி ஆடியாய் நடித்துக் காட்டிக்கொண்டிருக்கிறது ஒரு நல்ல கவிதை எப்போதும். |