Description |
பஞ்ச தந்திரக் கதைகளைப் பூரணமாக, முழுமையாக வெளியிட்டதுபோல், விகடகவி தெனாலி ராமன் கதைகளையும் முழுமையாக வெளியிடுகிறோம். இன்றும் தமிழில வெளிவராத அநேக தெனாலி ராமன் கதைகய் ஆந்திர நாட்டில் செவி வழி செய்தியாக உலவிக் கொண்டிருக்கின்றன. இதன் ஆசிரியர், தெனாலி (அவன் பிறந்த ஊர்), விஜயநகரம் (அவன் வளர்ந்த ஊர்) முதலிய இடங்களுக்கு நேரிலேயே சென்றவர். சுற்றுப்புற கிராமங்களில் இன்றும் உலவி வரும் சில தெனாலி ராமன் கதைகளையும் சேகரித்துக் கொண்டுவந்து, இதில் சேர்த்துள்ளார். பெரியோர்களுடன், சிறுவர்களும் படித்துச் சிரிக்கலாம். சுகமாக, இன்பமாக அறிவையும் விருத்தியாக்கலாம். எங்களது பஞ்ச தந்திரக் கதைகளுக்கு அளித்துவரும் ஆதரவைப்போல், இந்த தெனாலி ராமன் கதைகளுக்கும் முழுமையான ஆதரவு அளிப்பீர்கள் என்று நம்புகிறோம். உங்கள் மேலான ஆதரவு, இன்னும் பல நல்ல நூல்களை வெளியிடுவதற்கு எங்களுக்குத் தூணடுகோலாக அமையும் என்று நம்புகிறோம். |