1 / 3
The Woods

தந்த்ரா வழியில் தாம்பத்ய வாழ்க்கை

Author போதி பிரவேஷ்
Publisher போதி பிரவேஷ்
category இல்லறம்
Pages 442
Edition 1st
Format Paperback

₹494

₹520

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

சூரிய மண்டலம் நவ கிரகங்களைக் கொண்டது. கோள வடிவான கிரகங்கள் அனைத்தும் தன்னைத் தானே சுற்றிய படி சூரியனையும் சுற்றி வருகின்றன என்கிற உண்மையைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கண்டு பிடித்த நாடு இந்தியா. பூகோளம் என்கிற வார்த்தையே சாட்சி. மேற்கண்ட உண்மையைக் கூறியவர் ஆர்ய பட்டர். அவர் இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்தவர். ஐயமிருப்பின் இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னால் கட்டப்பட்ட எந்தவொரு இந்துக் கோவிலிலும் அமைக்கப்பட்டுள்ள நவகிரக சிலைகளை எண்ணிப் பாருங்கள். - கி. பி. அறுநூறுகளில் தோன்றிய வராகமிஹராம் என்கிற முனிவரால், "பஞ்ச, சித்தாந்திகா" என்கிற நூலிலும் மேற்கண்ட சூரிய மண்டல உண்மைகள் 11 தெளிவாக விளக்கப் பட்டுள்ளன. அதன் அடிப்படையில் தான் பஞ்சாங்கம் கணிக்கப் படுகிறது. - அடுத்து பதினோறாம் நூற்றாண்டில், தோன்றிய பாஸ்கராச்சார்யா என்கிற கணித மேதையால் லீலாவதி என்கிற நூலிலும், மேற்கண்ட தகவல்கள் சொல்லப் பட்டிருக்கின்றன. சூரிய மண்டலம் நவ கோள்களைக் கொண்டது. இதில் சூரியனே மையம். மற்ற கோள்களனைத்தும் சூரியனைச் சுற்றி வருகின்றன. இதில் சந்திரன் பூமியையும் சேர்த்து சுற்றிக் கொண்டிருக்கிறது. அவ்வாறு சுற்றிக் கொண்டிருப்பதால், பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும் போது சூரிய கிரகணமும், சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையே பூமி வரும் போது சந்திர கிரகணமும் ஏற்படுகிறது. கிரகங்கள் தட்டையாக இருக்குமானால், இது போல் ஒன்றையொன்று மறைக்க முடியாது என்று ரிக் வேதத்தில் சொல்லப்பட்டுள்ளது. பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? சந்திரனின் விட்டத்தை நூற்றியெட்டால் பெருக்குங்கள். துல்லியமான தூரத்தைத் தெரிந்து கொள்ளலாம். - அதே போல, பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமா? சூரியனின் விட்டத்தை நூற்றியெட்டால் பெருக்குங்கள். துல்லியமான தூரத்தைத் தெரிந்து கொள்ளலாம்.

Related Books