1 / 3
The Woods

இறைநம்பிக்கையில் பிழைநம்பிக்கைகள்: முக்கிய எச்சரிக்கைகள்

Author அப்துல் அஸீஸ் பின் பாஸ்
Publisher குகைவாசிகள்
category கட்டுரை
Edition 1st
Format paperback

₹95

₹100

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

நம்பிக்கை என்றாலே அது விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது என்பது பலரின் நம்பிக்கையாகி வருகிறது. அது ஜனநாயகம், கலாச்சாரம், இலக்கியம், பண்பாடு, அறிவுச் சுதந்திரம் போன்ற நவீன பெயர்களின் பதாகைகளில் காட்சிக்கு நிறுத்தப்பட்டு விளம்பரமாகின்றது. இதன் மூலம் எவ்வளவு இறைநிராகரிப்பான நம்பிக்கைக்கும் அங்கீகாரம் கிடைக்கின்றது. இதயத்தின் கண்களைத் தோண்டி இருட்டுக் கோப்பையிலிட்டு நுரையை ரசிப்பதால் பிழைநம்பிக்கையும் இறைநம்பிக்கை ஆகிவிடுமா? ஒரு நம்பிக்கையை மகா பிழை என்றே நம்பினாலும், அதைச் சுட்டிக்காட்டுவது தன் நண்பருக்கு ஒவ்வாமை என்பதாலோ, இம்மாதிரியான விவாதங்கள் இணக்கமான சமூக உறவுக்குக் குந்தகம் என்பதாலோ கண்டுகொள்ளாமல் விடுகிற பிழை நல்ல சீர்திருத்தவாதிக்குப் பொருந்தாதது. பிழைகளைச் சுட்டிக்காட்டும் போக்கே பிழை எனும் நம்பிக்கை எவ்வளவு பிழையானது! ஆனால், மனித வாழ்க்கையே பிழைகளிலிருந்து தப்பிப் பிழைப்பதற்கான போராட்டம்தானே? ஷைத்தானிடமிருந்து தப்பிக்க வேண்டுமில்லையா? அவன் நம்மை வீழ்த்த முதல் படுகுழியைத் தோண்டுவது இதயத்தில்தான். அதில்தானே இறைநம்பிக்கை குடிகொள்கிறது? அதில் அவன் பிழையான நம்பிக்கைகளைத் தோண்டித் தோண்டி குழி பறித்து விதை போடுகிறான். நமது செயல்பாடுகள் அதற்கேற்ப வளர்ந்து நம்மை நரகப் படுகுழியில் வீழ்த்துகின்றன. ஷெய்க் அப்துல் அஸீஸ் இப்னு பாஸ் (ரஹ்) இந்த நூலில் இறைநம்பிக்கை தொடர்பான பெரும் பிழைநம்பிக்கைகளை நுட்பமாக விளக்குகிறார்கள். இதன் தனித்தன்மை இது ஓர் உபதேச மறுப்புரை. தன் கவனத்திற்கு வந்த எழுத்தாளர்கள் சிலரின் வழிதவறிய கருத்துகளை மறுத்தும், அதிகமான மக்களிடம் உருவாகின்ற கொள்கைக் குழப்பங்களைத் தெளிவுபடுத்தியும் எழுதியுள்ளார்கள். மாமேதை ஒருவரின் உபதேசத்தில் நமது பிழைநம்பிக்கைகள் அகற்றப்பட இதை வாசிக்க வேண்டும்.

Related Books


5% off ஆயன்book Add to Cart

ஆயன்

₹569.05₹599