1 / 3
The Woods

கினோ 2.0

Author கிறிஸ்டோபர் ஆன்றணி , Translator : தீஷா
Publisher பேசாமொழி பதிப்பகம்
category கட்டுரை
Pages 356
Edition 1st
Format paperback

₹456

₹480

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

பட்ஜெட் அதிகமாக உள்ள திரைப்படங்கள்தான், திரையில் பார்ப்பதற்கு ‘சினிமாட்டிக்’ஆக இருக்குமென்று பலர் நினைக்கிறார்கள். ஆனால், ‘கினோ’வின் தொடர் வரிசைப் புத்தகங்கள் மூலம், நான் வெளிப்படுத்த விரும்புகிற விஷயம் என்னவென்றால், ஒரு திரைப்படத்தைக் காட்சியியல் தோற்றத்தில் சினிமாட்டிக்காகத் தெரிய வைப்பதற்கு, பணம் தேவையில்லை, உங்கள் அறிவு நுட்பத்தைப் பயன்படுத்தினாலே போதும். நீங்கள் கேமராவை எங்கு வைக்கிறீர்கள்? நடிகர்களை ஃப்ரேமில் எந்த இடத்தில் நிலைநிறுத்துகிறீர்கள்? அவர்களை எப்படி இயக்குகிறீர்கள்? போன்றவைதான் ஒரு வலுவான காட்சியமைப்பை உருவாக்குகிறது. அதுதான் திரையில் பார்ப்பதற்கு சினிமாட்டிக்காகத் தெரிகிறது. இது உரையாடல் காட்சிகளைப் படமாக்குவதற்கும் பொருந்தும். இந்த ’கினோ 2.0’ புத்தகத்தின் வாயிலாகக் கற்றுக்கொள்ளும் நுட்பங்களைக் கொண்டு, நீங்கள் எடுக்கிற உரையாடல் காட்சியைத் தகுந்த அளவிற்கு வலிமையாக்க முடியும். இதன்மூலம் கதைக்களத்தின் ஒவ்வொரு திருப்புமுனைப் புள்ளியும், காட்சியின் ஒவ்வொரு உணர்வும், நுட்பமான அர்த்தமும் தெளிவாக வெளிப்படும். இதற்கு நடிகர்களின் ஒத்துழைப்பும் அவசியம். ’மாஸ்டர் ஷாட்’ புத்தகம் முதலில் வெளியானபோது, அது உடனடியாக வாசகர்களிடமிருந்து பலமான விமர்சனங்களைப் பெற்றது மற்றும் விரைவிலேயே அது சிறந்தமுறையில் விற்பனையான புத்தகமாகவும் மாறியது. படப்பிடிப்புத் தளத்தில் ஒரு காட்சியை எப்படி அமைக்க வேண்டும்? என்பது தொடர்பாக, இப்புத்தகம் தங்கள் கண்களைத் திறந்துவிட்டதாகக் கூறுகிற, திரைப்பட இயக்குனர்களிடமிருந்து எனக்கு எண்ணற்ற மின்னஞ்சல்கள் வந்தன. ”ஒரு ஷாட்டை அமைப்பதற்கு முன்னால், இவ்வளவு விஷயங்கள் இருக்கிறதென்று, இதற்கு முன்புவரை எங்களுக்குத் தெரியாது” என பலர் சொன்னார்கள். ஒன்றிற்கு மேற்பட்ட கேமராக்கள் கொண்டு படம்பிடிப்பதுதான் எளிய வழிமுறை, மற்றும் அதன்மூலம் தான், சிறந்த காட்சியமைப்புகளை உருவாக்க முடியும் என்று நினைத்துக்கொண்டிருந்ததற்கு மாறாக, ஒரே கேமரா செட்-அப் வைத்து எடுக்கப்படுகிற காட்சிகள் கூட, காட்சிமொழி ரீதியில் பல நிலைகளில் வேலை செய்யுமென்று கண்டுகொண்டதாக இன்னும் சிலர் சொன்னார்கள். இதையெல்லாம் கேட்கும்போது, திரைப்பட இயக்குனர்கள் தங்கள் கலையில் முன்னெப்போதையும்விட, துறை சார்ந்து ஆழமாக ஆராய்வதற்குத் தயாராகயிருக்கிறார்கள் என்பதை அறிந்துகொண்டது மகிழ்ச்சியாக இருந்தது.

Related Books


5% off ஆயன்book Add to Cart

ஆயன்

₹569.05₹599