1 / 3
The Woods

அறியப்படாத தமிழகம்

Author தொ. பரமசிவன்
Publisher நற்றிணை பதிப்பகம்
category கட்டுரை
Pages 112
ISBN 9788194965992
Edition 1st
Format Paperback

₹47.5

₹50

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

வாசிக்கவும், சிந்திக்கவும், விவாதிக்கவும் வலிமை இழந்து போன நமது இளைஞர்களை மனத்தில் கொண்டே இந்தச் சிறுநூல் எழுதப்பட்டுள்ளது. இது சில முற்போக்காளர்கள் கருதுவதுபோலப் பழமை பாராட்டுதல் அன்று. வேர்களைப் பற்றிய அறிமுகமும் விஞ்ஞானத்தின் பகுதிதான். இந்த நூலில் உள்ள சிறு கட்டுரைகள் சிந்திப்பதற்குரிய சில களங்களை நோக்கிக் கை காட்டுகின்றன. இன்று படைப்பு உணர்வைவிட விற்பனை உணர்வே சமூகத்தை ஆட்டிப் படைக்கின்றது. கல்விச் சந்தையும் தாலிச் சந்தையும் அழுகி நாற்றமெடுக்கின்றன. தனது விஞ்ஞானக் கண்ணால் திரைப்படத்துறை கிராமத்தின் மென்மையான அசைவுகளை விலைப் பொருளாக்குகிறது. மறுபுறமாக நுகர்வியம் என்னும் வாங்கும் உணர்வைத் தகவல் தொடர்புச் சாதனங்கள் தினந்தோறும் கண்காணித்து வளர்க்கின்றன. உண்மையில் எக்காலத்தும் மனிதன் வாங்கவும் விற்கவும். பிறந்தவனல்லன்; ஆக்கவும் கற்கவும் கல்விக்கு ஊடாக நுகரவும் பிறந்தவன். கடந்த முப்பது ஆண்டுகளாக நான் கண்டும் கேட்டும் வாசித்தும் அறிந்தவை மட்டுமே இந்த நூலில் பதியப்பட்டுள்ளன. தமிழகத்தின் தென் மாவட்டங்கள்தாம். என் வளர்ப்புக்கும் கல்விக்கும் வாழ்வுக்கும் பட்டறிவுக்கும் எல்லையாகும். ஆயினும் என் தேடல் மனிதனை நோக்கியே.

Related Books


5% off ஆயன்book Add to Cart

ஆயன்

₹569.05₹599