1 / 3
The Woods

மக்களின் அபின்

Author சி.சரவணா கார்த்திகேயன்
Publisher Zero Degree Publishing
category கட்டுரை
Edition 1st
Format Paperback

₹142.5

₹150

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

மதம் மக்களின் அபின் - இது கார்ல் மார்க்ஸ் கண்டடைந்தது. போதையில் மூழ்கிய பின் நிஜப் பிரச்சனைகள் பொருட்டில்லை. அப்படித்தான் மதப் போதையில் மயங்கிய‌ இந்து, இந்தி, இந்திய மக்களினால் அரசியல் சீரழிகிறது. இக்கட்டுரைகள் 2014ம் ஆண்டு நரேந்திர மோடி அசைக்க முடியாத பெரும்பான்மையுடன் பாரதப் பிரதமராக ஆட்சியில் அமர்வதற்கு முன்பும் பின்பும் பல்வேறு ஊடகங்களில் எழுதப்பட்டவை. இந்துத்துவம் அதிகாரத்துக்கு வந்தால் நிகழப் போகும் பிறழ்வுகளை அப்போதே துல்லியமாகவும் தெளிவாகவும் எச்சரித்தவை. இன்று மீண்டும் வாசித்துப் பார்க்கையில் இவற்றில் பல தீர்க்க தரிசனங்களாகச் சொல்லப் பட்டிருப்பதைப் பெருமூச்சுடன் உணர முடிகிறது. கன்னிக் கட்டுரைத் தொகுப்பு. சில அறிவியல் கட்டுரைகள்; பிற அரசியல் கட்டுரைகள். 2011ம் ஆண்டின் நொபேல் பரிசுகள் குறித்து அம்ருதா இதழில் 2011-2012ல் எழுதிய தொடர் கட்டுரைகள் இதில் பிரதானம். சர்வதேச‌ அரசியல் மற்றும் பிற மாநில அரசியல் குறித்தும் கட்டுரைகள் உண்டு. ஒரு துறைசார் நிபுணரின் செறிவோடும் ஒரு பள்ளி ஆசிரியரின் தெளிவோடும் இவை தீட்டப்பட்டிருப்பது தனித்துவமானது. இதில் ஓர் அறிவியல் கட்டுரை பற்றி ஜெயமோகன் எழுதியது: "வழக்கமாக இவ்வகை விஷயங்கள் எழுதுபவர்கள் தாங்கள் ஏதோ அதிநுண் நிலையில் இருந்து பாமரர்களுக்காக இறங்கி வந்து எழுதுவதான பாவனையில் அசட்டு நகைச்சுவை கலந்து அரைகுறையாக ஏதாவது எழுதுவதே வாடிக்கை. சரவணகார்த்திகேயனின் கட்டுரை விஷயத்தை நன்கு புரிந்து கொண்டவருக்குரிய தெளிவுடன், கச்சிதமாக, ஆர்வமூட்டுவதாக, அமைந்துள்ளது.

Related Books


5% off ஆயன்book Add to Cart

ஆயன்

₹569.05₹599