1 / 3
The Woods

விடுதலை போராட்டத்தில் பண்பாட்டின் பாத்திரம்

Author அமில்கர் கப்ரால் , Translator : எஸ். பாலச்சந்திரன்
Publisher விடியல் பதிப்பகம்
category கட்டுரை
Pages 32
Edition 1st
Format paperback

₹9.5

₹10

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

1972ல் பாரீஸில் நடைபெற்ற யுனெஸ்கோ மாநாட்டில் அமில்கர் கப்ரால் ஆற்றிய உரை. ஆப்பிரிக்க நாடான அங்கோலாவின் விடுதலை இயக்கப் போராளி அமில்கர் கப்ரால்.போர்ச்சுக்கலின் காலனி ஆதிக்கத்திற் கெதிராக காலனிய எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக பணியிலிருந்து நீக்கப்பட்டு, நாடு கடத்தப் பட்ட அமில்கர், அங்கோலா மக்கள் விடுதலை இயக்கம் அமைப்பதில் முக்கிய பங்கு வகித்தவர்.1961ல் போர்ச்சுக்கீசியக் காலனி நாடுகளது விடுதலை இயக்கங்க ளின் கூட்டமைப்பின் துணை பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டஇவர், ஜனவரி 20, 1973 அன்று போர்ச்சுக்கீசியக் காலனியாதிக்கவாதிகளின் கூலிப் படைகளால் கினியாக் குடியரசின் தலைநகர் கொனாக்ரியில் படுகொலை செய்யப்பட்டார். படுகொலைக்கு முந்தைய ஆண்டு, அவர் 1972 -ஜூலை மாதம் பாரிஸில் நடைபெற்ற `யுனெஸ்கோ’ மாநாட்டில் ஆற்றிய உரையே இங்கு நூல் வடிவம் பெற்றுள்ளது. விடுதலைப் போராட்டத்தில் பண்பாட்டின் பாத்திரம் என்ற இந்த நூல், `பண்பாடு’ என்ற ஆயுதம் வளர்முக ஏழை நாடுகளில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை ஆக்கப்பூர்வமாக விளக்குகிறது.ஒரு நாட்டில், காலனியாதிக்கத்திற்கு எதிராக, நடை பெறுகிற போராட்டத்தில் மக்களின் விடுதலையும், தேசிய விடுதலையும் மிக முக்கியமானது. ஒருபுறம் ஏகாதிபத்திய ஆட்சி மக்களிடம் உள்ள வளங்களைச் சுரண்டி பொருளாதார முன்னேற்றத்தை அடைவது போன்ற ஒரு தோற்றத்தை உருவாக்குகிறது. தொழில்நுட்பங்கள் பெருகி வளர்ச்சியும் முன்னேற்றமும் ஏற்படுகிறது என்ற தோற்றம் தெரிகிறது. ஆனால், உண்மையில் உழைக்கும் மக்களின் வளங்கள் சுரண்டப்பட்டு, வறுமை நிலைக்கு தள்ளப்படுகின்ற நிலையேநிரந்தரமாகிறது என்பதைத் தனது உரையில் நிறுவுகிறார் அமில்கர். அவரது உரை மூன்று பகுதிக ளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.விடுதலைப் போராட்ட இயக்கங்கள் தங்களது தொடக்க காலத்திலேயே பண்பாட்டு வெளிப்பாடுக ளின் முத்திரையை கொண்டவையாக இருப்பதால், பண்பாடானது மக்களை திரட்டும் வழிமுறையாக வும் விடுதலைப் போராட்டத்துக்கான ஓர் ஆயுதமாகவும் கூட கருதப்படுகிறது என முதல் பகுதியில் விளக்குகிறார்.ஏகாதிபத்திய ஆட்சியின் ஒடுக்குமுறைக்கு உட்பட்ட சமூகமானது அவற்றின் பண்பாட்டு அடையாளங்களை அழிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் பண் பாட்டு அம்சங்கள் இன்னும் உயிரோட்டத்துடன்தான் இருக் கின்றன. நடப்பிற்கு ஏற்றவாறு தகவமைத் துக் கொள்கின்றன என்றும் குறிப்பிடுகிறார்.பண்பாட்டுப் போராட்டம் அந்நிய அடக்குமுறையை எதிர்கொள்வதற்கு குறிப்பிட்ட தருணங்களில் பல்வேறு வடிவங்களை எடுக்கிறது; எனவே காலனியாதிக்கவாதிகள், தங்களது அடிமை நாடுகளின் பண்பாட்டுப் போராட்டத்தை நிர்மூலமாக்கிட கண்டுபிடிக்கப்பட்ட ஒரே வழிமுறை, அந்தப்பண்பாட்டுக் கூறுகளை தன்வயப்படுத்துவது என்று திட்ட மிட்டு, அதைச் செய்வதில் இறங்கின என்றும் விளக்குகிறார்.இரண்டாம் பகுதியில், ஏகாதிபத்திய ஆட்சியின் பண்பாட்டு அழிப்பு நடவடிக்கைக்கு எதிராக மக்கள் தங்களு டைய அடையாளத்தைப் பேணிப் பாதுகாக்கிறார்கள். இந்த அடையாளம் காலனியாதிக்க சக்தியின் அடையாளத்தி லிருந்து வேறுபட்டது என்று கூறும் அமில் கர், அடையாளத்தை தீர்மானிப்பதில் உயிரியல் ரீதியான அம்சத்தை விட சமூகவியல்ரீதியான அம்சமே மிகவும் முக்கியமான பாத்திரம் வகிக்கிறது என்பதை நிறுவுகிறார். பகுதி மூன்றில் மனிதனுக்கும் இயற்கைக்கும், மனிதனுக்கும் மனித னுக்கும் இடையிலான உறவுகளின் – ஆற்றல் மிக்க இணைப்பே பண்பாடு எனக்கூறும் அமில்கர், தனிநபரிடமோ அல்லது குழுவிடமோ, சமூ கம் அல்லது சமூகக் குழுவின் பரிணாம வளர்ச்சியின் ஒவ்வொரு கட் டத்திலும் இந்த இணைப்பு வெளிப் பட உதவுகின்ற பல்வேறு வடிவங் களே பண்பாட்டு வெளிப்பாடுக ளாகும் என்கிறார்.மக்களின் பண்பாட்டு ஆற்றல்- அவர்களின் அடை யாளம். அவர்க ளின் கண்ணியம் ஆகியவற்றின் மிகவும் சிக்கலான வெளிப்பாடாகிய நாடுகளின் விடுதலைப் போராட்டமானது பண்பாட்டை வளப்படுத்தி, அதன் வளர்ச்சிக்குப் புதிய எதிர்காலத்தை உருவாக்குகிறது. காலம் மாற மாற பண்பாட்டு வெளிப்பாடுகள் புதிய உள்ளடக்கத்தைப் பெறு கின்றன. புதிய வெளிப்பாட்டு வடிவங்களைக் கண்டடைகின்றன. ஆகவே விடுதலைப் போராட்டத்தில் மட்டுமின்றி, மானிட முன்னேற் றத்துக்கான மாபெரும் போரிலும், அரசியல் கல்வி மற்றும் பயிற்சிக்கான ஆற்றல் வாய்ந்த கருவிகளாகப் பண்பாட்டு வெளிப்பாடுகள் மாறு கின்றன என்று அமில்கர் கப்ராலின் இந்த சிறு நூல் நமக்கு கற்றுத் தருகிறது. மேலும் கற்கத் தூண்டுகிறது.

Related Books


5% off ஆயன்book Add to Cart

ஆயன்

₹569.05₹599