1 / 3
The Woods

இங்கே எதற்காக

Author இயக்குநர் ஜெயபாரதி
Publisher டிஸ்கவரி புக் பேலஸ்
category கட்டுரை
Pages 182
Edition 1st
Format paperback

₹142.5

₹150

Add to Cart Facebook share link Facebook share link Twitter share link
+ ₹40 shipping fee* (Free shipping for orders above ₹1000)

Description

மகாபாரதத்தில் விதுரன் என்று ஒரு கதாபாத்திரம். வியாசருக்கும், பணிப்பெண்ணுக்கும் பிறந்தவன் அவன். தரும தேவன் அம்சம். விதுர நீதி என்ற தலைப்பில் அவன் கூறியவை வாசகர்களை பெரிதும் கவரும். நீதிக்கு புறம்பாக உயிரே போனாலும் அவன் வேறு ஒரு முடிவு எடுக்க மாட்டான். என்ன தான் அவன் நல்லதைச் சொன்னாலும் அந்த கால கௌரவர்களும் சரி, இக்கால மக்களாகிய நாமும் சரி வாழ்க்கையில் அவற்றை கடைபிடிக்க மாட்டோம். மகாத்மா காந்தியை வணங்குவோம். ஆனால் அவர் கடைபிடித்த எளிமையை, நேர்மையை, ஒழுக்கத்தை, சத்தியத்தை நாம் ஒதுக்கி விடுவோம். அதே போல் தான், மனித குலத்தின் மேன்மையான, உயர்வான, சத்தியம் சார்ந்த விஷயங்களை கலைப் படமாக ஒருவர் உருவாக்கி திரையிட்டால், அதை அனைவரும் ஏகோபித்து ஆதரிக்கமாட்டோம். இது ஒரு வகையில் சாபம்தான். அப்படி தமிழ் ரசிகர்களால் அலட்சியப்படுத்தப்பட்டவர்களில் நண்பர் ஜெயபாரதி அவர்களும் ஒருவர். பள்ளி நாட்களிலேயே தானே நாடகம் எழுதி நண்பர்களோடு மேடையில் நடித்தவர் ஜெயபாரதி. பெருமை மிகு பெற்றோர் து.ராமமூர்த்தி - சரோஜா ராமமூர்த்தி. இருவருமே தமிழ் எழுத்தாளர்கள். எம்.ஜி.ஆர்-பத்மினி நடித்த ‘விக்கிரமாதித்தன்’ – படத்தின் ஒரு பகுதி திரைக்கதையை சரோஜா ராமமூர்த்தி அவர்களை எழுத பணித்தார். பள்ளியில் இவர் படித்த காலத்தில் பக்கத்து வீட்டில் வசித்தவர் ஆந்திரா ஹீரோ என்.டி. ராமாராவ் அவர்கள். எம்.ஜி.சக்ரபாணியின் மகன் இவரது கல்லூரி தோழன். இந்த விஷயங்கள் எதுவுமே சினிமாவை நோக்கி இவரை நகர்த்தவில்லை. ஓவியக்கல்லூரியில் நான் படித்த காலத்தில், என்னைக் கவர்ந்த வங்காள இயக்குநர்கள் சத்யஜித்ரே, மிருணால் சென், ரித்விக் கட்டக், தபன் சின்ஹா போன்றோர். இந்த மேதைகளே இவரை திரையுலகின் பால் ஈர்த்திருக்கின்றனர். டைரக்டராக இவர் பொறுப்பேற்று பணியைத் துவங்கிய கால கட்டத்தில் இயக்குநர் கே.பி. அவர்கள் தன்னுடைய – ‘ மூன்று முடிச்சி’ – ‘பட்டினப் பிரவேசம்’ படங்களில் நடிக்க அழைப்பு விடுத்தார். அதை ஏற்க இயலாமல் போயிற்று. ’அவள் அப்படித்தான்‘ என்ற ஒரே படத்தின் மூலம் கலா ரசிகர்கள் நெஞ்சங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்த – சமீபத்திய அகால மரணமடைந்த ருத்ரையா அவர்களின் இரண்டாவது படத்தில் கதாநாயகனாக நடித்து பாதியில் நீக்கப்பட்டது இன்னொரு துரதிஷ்டம் சம்பவம். ‘குடிசை’ என்ற தலைப்பில் தனது முதல் படத்தை கல்லூரி மாணவ மாணவியரிடம் நன்கொடை வசூலித்து எடுத்தார். இன்று அந்தக் கலைப்படம் மத்திய அரசு காப்பகத்தில் பாதுகாக்கப்படுகிறது. ‘குடிசை’-யைத் தொடர்ந்து 7 படங்கள் எழுதி இயக்கியிருக்கிறார். தேசிய அங்கீகாரத்தை இரண்டு முறை இவர் படங்கள் பெற்றன. சுமார் 60 சிறுகதைகள், 2 நாவல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். மத்திய அரசிற்காக 2 ஆவணப் படங்கள் மற்றும் தூதர்ஷனுக்காக சாகித்ய விருது பெற்ற ‘வேள்வித்தீ’-யை படமாக்கித் தந்துள்ளார். Film Finance Corporation- நிதி உதவிக்காக 28 வயதில் பம்பாய் சென்று ரிஷிகேஷ் முகர்ஜியையும், டெல்லியில் ஐ.கே.குஜரால் அவர்களையும், கோழிக் கோட்டிலிருந்து வெளிவரும் ‘மாத்ரு பூமி’ மலையாள இதழ் ஆசிரியரையும் சந்தித்திருக்கிறார். தமிழில் ஒரு யதார்த்த சினிமாவை உருவாக்கி வெற்றி பெறவேண்டும் என்ற வெறியே காரணம். சத்யராஜ், வடிவேலு, விவேக் போன்றவர்கள் இவர் படைப்புகளில் பங்குபெற ஆர்வம் காட்டினர். “ஸ்ரீவித்யா எப்போது அழைத்தாலும் வந்து நடித்து கொடுப்பேன்” என்றார்- அகால மரணமடைந்தார். ‘குடிசை’- ஜெயபாரதி என்ற அடைமொழி வேண்டாம். இயக்குநர் ஜெயபாரதியாகப் புகழ் பெறவேண்டும் என்று இளையராஜா வாழ்த்தினார். ‘இங்கே எதற்காக’ இருக்கிறீர்கள், மலையாளத்தில் இந்தப் படங்களை இயக்கியிருந்தால் கோபுரத்தில் வைத்து உங்களை கொண்டாடியிருப்பார்கள் என்றார் கவிஞர் வைரமுத்து அவர்கள். 65 வயதில் ‘இங்கே எதற்காக’- மாற்று சினிமாவை இயக்கி, வாழ்க்கையை ஒரு போராட்டமாக செலவழித்தேன் என்று உள்மனம் கேட்டுக் கொண்டே இருக்கிறது ஜெயபாரதிக்கு... ‘இதுவும் கடந்து போகும்’- அவருக்கும் ஒருநாள் விடியல் தோன்றும் என்று நாம் வாழ்த்துவோம்.

Related Books


5% off ஆயன்book Add to Cart

ஆயன்

₹569.05₹599