Description |
எண்பது அகவையை எட்டியதற்கு அம்பை தனக்கே அளித்துக்கொள்ளும் அன்பளிப்பு இந்த நூல். பதினைந்து கதைகள் கொண்ட இத்தொகுப்பின் முதல் மூன்று கதைகள் இதழ்களில் வெளிவந்தவை. மற்ற பன்னிரண்டு கதைகள் தொகுப்புக்காகவே எழுதப்பட்டவை. நாளாக நாளாக அம்பையின் படைப்புத் திறன் மேலும் வீரியத்துடனும் உற்சாகமாகவும் வெளிப்படுவதை இந்தத் தொகுப்பில் உணரலாம். இக்கதைகள் புதிய களங்கள், புதிய மனிதர்கள், புதிய கருக்கள் என்று பயணிக்கின்றன. |