Description |
திண்ணைகள் இன்று அருகிவிட்டாலும் அந்தக் காலத்தில் திண்ணைப் பேச்சுக்கள் வேறு தளங்களிலும் வடிவங்களிலும் இன்றும் தொடர்கின்றன. தேநீர்க் கடைகள், முச்சந்திகள், அச்சு இதழ்கள் எனத் தொடர்ந்த இந்த அரட்டைகள் இன்று சமூக வலைதளங்களில் அரங்கேறுகின்றன. திண்ணைப் பேச்சின் தொனியில் வாழ்வின் பல விதமான அசைவுகளைப் பற்றியும் ரசனையோடும் கரிசனத்தோடும் பேசும் கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். வெயில், மழை, உறவுகள், மனத்தாங்கல்கள், படைப்பாளிகள், படைப்புகள், மௌனம் எனப் பல்வேறு பொருள்களைப் பற்றி வாசகர்களோடு பேசுகிறார் தஞ்சாவூர்க் கவிராயர். மொட்டைமாடியைப் “பிரபஞ்சத்தின் திண்ணை” என்று ஓரிடத்தில் வர்ணிக்கும் கவிராயர், தன்னுடைய ஏட்டுத் திண்ணையில் பிரபஞ்சத்தின் பலவிதமான கோலங்களை மொழிச் சித்திரங்களாகத் தீட்டுகிறார் |