Description |
அனுபவங்களின் மூலம் கிடைத்த பாடங்களையும் பார்வைகளையும் இலகுவான, நட்பார்ந்த மொழியில் பகிர்ந்துகொள்கிறார் சஞ்சயன். அனுபவங்களை வாசகரின் மனத்திற்கு நெருக்கமாகக் கொண்டு வருகின்றன இக்கட்டுரைகள். அங்குமிங்குமாக அல்லாட நேரிடும் இன்றைய வாழ்க்கை முறையில் பிறரது இன்பத்தையும் துன்பத்தையும் பகிர்ந்துகொள்ள இன்றைய யுகம் அனுமதிப்பதில்லை. ஒவ்வொருவரையும் தனித்தனியாகப் பிரித்துப்போட்ட இந்தச் சமூகக் கட்டுமானத்திலிருந்து விலகித் தன்னைப் பிறரோடு இணைத்துக்கொள்ளும் மானுட நேயம்தான் இக்கட்டுரைகளின் சாரம். |