Description |
இந்துக்கள் ஏன் சிலைகளை வணங்குகிறார்கள்? இந்துக்கள் எப்பொழுதுமே சாதி உணர்வு கொண்டவர்கள்தானா? இந்துக்கள் சைவ உணவு உண்பவர்களாகத்தான் இருக்க வேண்டுமா? முஸ்லிம் படையெடுப்பாளர்களின் வருகை இந்துக் கலாச்சாரத்தை அழித்ததா? இந்துத் தத்துவம், அதனுடன் இணைந்த இந்திய வரலாறு ஆகியவை பற்றிய முக்கியமான கேள்விகளுக்கு எளிமையான, தெளிவான பதில்களைச் சுவையான முறையில் கூறும் நூல் இது. இந்து மதத்தின் பழக்கவழக்கங்களையும் நம்பிக்கைகளையும் ஆராயும் தேவ்தத் பட்நாயக்கின் இந்தப் புத்தகம் இந்து மதம் பற்றிய தகவல்களின் களஞ்சியமாகத் திகழ்கிறது. ஆங்கிலத்தில் 2019ஆம் ஆண்டு ‘Faith’ என்னும் தலைப்பில் வெளியான இந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு வடிவம் ஆசிரியரின் விருப்பப்படி ‘சனாதன தர்மம்: ஒரு விசாரணை’ என்னும் தலைப்பில் வெளியாகிறது |