Description |
தமிழ் அக இலக்கிய மரபில் முதற்பொருளாக நிலமும் பொழுதும் இடம்பெற்றுள்ளன. உழவு செய்யும் வயல் என்னும் பொருளுக்கு நிலம் மாறிவிட்டது. ஆகவே களம் என்றும் வெளி என்றும் நவீன இலக்கிய விமர்சனத்தில் கையாள்வர். கோட்பாட்டு அடிப்படையில் வெளி என்பதைக் கலைச்சொல்லாகப் பயன்படுத்துகின்றனர். இலக்கிய உருவாக்கம் வெளியையும் காலத்தையும் அடிப்படையாகக் கொண்டது. படைப்புகளில் அவை சாதி, அரசியல், பாலினம் முதலிய பல பரிமாணங்களைக் கொள்கின்றன. எழுத்தாளரின் புரிதலுக்கும் பார்வைக்கும் ஏற்பவோ சமகாலச் சூழலின் வெளிப்பாடாகவோ அப்பரிமாணங்கள் வெளிப்படுகின்றன. அந்நோக்கில் பழந்தமிழ் இலக்கியம் முதற்கொண்டு நவீன இலக்கியம்வரைக்கும் தம் ஆய்வுப் பார்வையை விரித்து இக்கட்டுரைகளை க. காசிமாரியப்பன் எழுதியிருக்கிறார். மொழியிலும் சொல்முறையிலும் சுவைகூடித் திகழும் இக்கட்டுரைகள் அனைவரும் வாசிப்பதற்கு உகந்தவை. |