Description |
ஒரு கறுப்பின அடிமைச் சிறுமியின் வாழ்க்கை வரலாற்றை நாம் ஏன் படிக்க வேண்டும்? • உழைக்கும் மக்கள் உயர்வு பெறக் கல்வியறிவு அவசியம் என்பதை உணர்த்துவதால். • அரசு இயந்திரம் உரிமைக்கான போராட்டங்களைக் கலகக் குரல்கள் என்று சொல்லிப் பொய்ப் பரப்புரைகள் செய்து ஒடுக்குமுறையைக் கையாளும் என்பதைத் தெரிந்துகொள்ள முடிவதால். • தன்னிடம் பயிலும் பணியாற்றும் பெண்கள் தனதுடைமை என்ற ஆணாதிக்கப் போக்கை எப்படித் துணிவோடு எதிர்கொள்வது என்பதை உழைக்கும் பெண்களைக் கற்றுக்கொள்ளத் தூண்டுவதால். • ‘என் உடல் என் முழு உரிமை’ என்ற பெண்ணியக் குரலை முதன்முதலாக உரக்க ஒலித்த பெண்ணாக ஹேரியட் திகழ்வதால். • ஒத்த கருத்துடையவர்கள் ஒன்றுபட்டுப் போராடுவதே ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்கான வெற்றிப் பாதை என்ற கருத்தை ஜேக்கப்ஸின் வரலாறு நமக்கு உணர்த்துவதால். 150 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான இந்த நூல் உலக மொழிகள் பலவற்றிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கல்விக்கூடங்களில் கற்பிக்கப்படுகிறது. உலக அளவில் அதிகம் விற்பனையாகும் நூல்களின் பட்டியலில் இந்த நூலும் ஒன்று. |